Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!

10:10 AM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisement

வைகை அணையிலிருந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளைக் கடந்து பார்த்திபனூர் மதகு அணையைச் சென்றடைந்ததும், அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

மேலும், பார்த்திபனூர் மதகு அணையின் இடது பிரதானக் கால்வாயில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 41 பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளாக உள்ள மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை உள்ள மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களைச் சேர்ந்த வலது, இடது பிரதானக் கால்வாய்களில் வைகை ஆற்றில் வரும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,531 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் பகுதிகளில் பெய்த மழையால் பாசனக் கண்மாய்கள் ஓரளவு நிரம்பி உள்ள நிலையில், தற்போது வைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரால் கண்மாய்களின் நீர்மட்டம் மேலும் உயரும்.

தற்போது, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விதைப்பு, நடவு முறைகளில் நெல் நாற்றுகள் பயிரிடப்பட்டு வளர்ந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வைகை ஆற்றில் வரும் தண்ணீரால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைகை அணையில் இருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறக்கபட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
FloodWarningNews7Tamilnews7TamilUpdatesvaigaivaigaidamWaterWaterRelease
Advertisement
Next Article