Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேட்டையன் இறுதி கட்ட படப்பிடிப்பு | மும்பை பறந்தார் ரஜினிகாந்த்...

03:39 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன்  இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த்,  அமிதாப் பச்சன், ராணா டகுபதி,  பகத் ஃபாசில்,  மஞ்சு வாரியர்,  ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு வேட்டையன் வெளியாகும் என்னை எதிர்பார்க்கப்படுகிறது.  ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை கிளம்பி சென்றுள்ள காட்சிகள் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகின்றன.

Tags :
#VettaiyanCoolieRajinikanth𓃵Super StarThalaivar
Advertisement
Next Article