Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'வடக்கன்' திரைப்படம் மே மாதம் வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

09:54 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, வடக்கன் திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘வடக்கன்’.  இவர் வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும்,  அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதியுள்ளார்.  வடக்கன் திரைப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் லிங்குசாமி வழங்கும் இப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார்.  ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதியுள்ளார்.   இப்படம் வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது.  இந்த நிலையில், ‘வடக்கன்’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Bhaskar Sakthicinema updateDirector Bhaskar Sakthirelease dateVadakkan
Advertisement
Next Article