Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக வந்தவரின் வயிற்றில் கருப்பை - மருத்துவர்கள் அதிர்ச்சி!

12:02 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

குடலிறக்க அறுவை சிகிச்சைகாக வந்த நபரின் வயிற்றில் கருப்பை மற்றும் கருமுட்டை ஆகியவை இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப்பை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பரிசோதனைக்கு பிறகு அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதியைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையும் படியுங்கள் : மார்வெலின் புதிய அவெஞ்சர்ஸ் திரைப்படம் – ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் ‘கிங் தானோஸ்’

அறுவை சிகிச்சையில்  பெண்களுக்கு இருக்கும் கருப்பை இருப்பது தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி அடையாத அந்த கருப்பையுடன் கரு முட்டையை உருவாக்கும் ஓவரியும் இருந்துள்ளது. ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் பெண்ணின் கருப்பை வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து  ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Herniahospitaloperationuttar pradesh
Advertisement
Next Article