Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எருமைகள் மீது மோதி தடம் புரண்ட உதகை மலை ரயில்!

02:43 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

உதகை அருகே எருமைகள் மீது மலை ரயில் மோதியதில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

Advertisement

உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்பட்டு பகல் 12.30 மணி அளவில் உதகை சென்றடையும்.  இந்நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் உதகை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது.  ரயில் மோதியதில் ஒரு எருமைமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  மற்றொரு எருமை படுகாயம் அடைந்தது. இதனால், ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது . ரயிலில் 200க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில்,  மலை ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின்பேரில் வளமான கூட்டணி” – அண்ணாமலை பேட்டி

ரயிலில் பயணித்த பொது மக்கள் பாதுகாப்பாக மிட்கப்பட்டனர்.  இதையடுத்து, உதகையில் மலை ரயில் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Tags :
Accidentbuffaloesderailment accidentootytrain accident
Advertisement
Next Article