Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#USElection | நாளை நடைபெறுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல்… வெல்லப் போவது யார்?

07:52 AM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

Advertisement

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, அப்போதைய அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார். ஜோ பைடனின் ஆட்சி காலம் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (நவ.5) நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

எஞ்சியவர்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் நாளை (நவ.5) வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். தற்போதைய நிலவரப்படி கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் 2 நாட்களில் ஓரளவு விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Next Article