Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அன்பான மகள் வந்தாள்.. அம்பானி நான் ஆகிறேன்... - ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்!

ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்ற தம்பதி மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
10:37 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்ற தம்பதி மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

அமெரிக்கா நாட்டின் லூசியானா பகுதியை பூர்வீகமாக கொண்ட ஜோடி 2024 இன் இறுதியில் 4குழந்தைகளை வரவேற்று புத்தாண்டிற்குள் நுழைந்தனர். பெய்டன் லேரி - ஃபாரா என்ற இந்த தம்பதி கல்லூரியில் சந்தித்து பழகி பின்னர் காதல்  திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன இவர்களுக்கு 2 வயதில் பி.ஜே, என்ற மகன் இருக்கிறார். இந்த தம்பதி இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த நிலையில் 32 வாரத்தில்  ஃபர்ரா லாரி அறுவை சிகிச்சை மூலம்  நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவர்களின் குழந்தைகள் ஒரே மாதிரியான இரட்டைக் தொகுப்பாக  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு கருவுறுதல் சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையாகவே கருவுற்றதாகவும் அதனால் பிறந்ததும் ஆச்சரியம் மற்றும் சந்தோசத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் பெற்றோர்கள் அந்த குழந்தைக்கு   ஏ, பி, சி மற்றும் டி என்று பெயரிட்டு அழைத்துவந்தனர்.. பின்னர் நாட்கள் கடந்து அந்த குழந்தைகளுக்கு பைஸ்லி, சங்கீதம் மற்றும் ஃபாலின் என்று பெயர் வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தை விரிவடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த  பெய்டன் லேரி - ஃபாரா  தம்பதி ஐந்து குழந்தைகளுடன் அவர்கள் வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

Tags :
4girlschildAmericacoupleUSA
Advertisement
Next Article