Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூசணிக்காய் படகு சவாரி… 70 கி.மீ பயணித்து #WorldRecord | எங்கு தெரியுமா?

07:30 AM Nov 05, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன்சென் என்பவர் பெரிய பூசணிக்காயை படகாக பயன்படுத்தி பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement

பொதுவாக காய்கறிகள் உணவு சமைப்பதற்காகவும், மருந்து பொருட்களாகவும் பயன்பட்டு வருகிறது. ஆனால், ஒருவர் அதில் பயணம் செய்து உலக சாதனை படைத்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல ஆண்டு கனவாக இருந்துள்ளது. அதனை தற்போது செய்து முடித்திருக்கிறார்.

இதற்காக, கடந்த ஜூலை மாதம் வளர்க்கப்பட்ட பூசணிக்காய், அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. 429.26 செ.மீ. சுற்றவுடன் 555.2 கிலோ எடை கொண்டுள்ளது. அந்த பெரிய பூசணிக்காய்க்கு பங்கி லேப்ஸ்டர் என கேரி கிறிஸ்டன்சென் பெயரிட்டார்.

இதையும் படியுங்கள் : #Amaran படத்திற்கு TN CAPF WARA கண்டனம் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரிக்கை!

இதனை கொலம்பியா ஆற்றில் படகு போன்று பயன்படுத்தி, 73.5 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து உள்ளார். இதற்காக அவர் 26 மணிநேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. துணிச்சலாக படகை செலுத்தி பாதுகாப்பான இடத்தில் இறங்கியுள்ளார். இந்த பயணத்தில் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Tags :
BoatGaintPumpkinGaryKristensenNews7Tamilnews7TamilUpdatesUSWorldRecord
Advertisement
Next Article