குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர்களை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி விமான நிலையம் சென்று வரவேற்றார். அப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜே.டி. வான்ஸூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். தொடர்ந்து இன்று (ஏப்ரல்.21) மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜே.டி. வான்ஸ் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியா - அமெரிக்காவுக்கு பயனளிக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்றும் எரிசக்தி, பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை குறிப்பிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.