அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு!
அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய அதிபா் ஜோ பைடனை விட, துணை அதிபா் கமலா ஹாரிஸ் தான் தகுதியானவா் என்று அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானோர் கருதுவதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடுவதற்கு தற்போதைய அதிபா் ஜோ பைடனைவிட, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ்தான் தகுதியானவா் என அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானோர் கருதுவதாக ‘ஏபி-என்ஓஆா்’ நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.