Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெ. அதிபர் தேர்தல்: ஆளுங்கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு!

04:43 PM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து எதிரணியில் இந்திய வம்சாவளிப் பெண்மணி கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று (ஆக. 6) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயதான அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹரிஸ் முன்னிறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் 99% வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகக் கிடைத்துள்ளன.

இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்டமாக துணை அதிபர் வேட்பாளர் யார் என்பதை கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி தேசிய ஒருங்கிணைப்புச் செயலர் ஜேசன் ரே விரைவில் அவரிடம் அங்கீகாரச் சான்றிதழை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு சற்றே அதிகரித்திருப்பது, தேர்தலுக்கு முந்தைய சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Donald trumpJoe bidenKamala harrisNews7Tamilnews7TamilUpdatesPresidential ElectionUS ElectionUS Elections 2024USA
Advertisement
Next Article