அமெ. அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் - துளசேந்திரபுரம் மக்கள் மகிழ்ச்சி!
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.
இவை ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் தெரிவித்தார். இதனை அடுத்து ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும்
பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் (கமலா ஹாரிஸ்) வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது
குறித்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்
வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க
வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி கிராம மக்கள் வழிபட்டனர்.