#USPresident ஜோ பைடனுடன் இந்திய வம்சாவளியினர் | அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார்.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை வெள்ளை மாளிகையில் உள்ள நீல அறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : பெருநகர #Chennai மாநகராட்சி மாமன்றக் கூட்டம் | கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!
இந்திய வம்சாவளியினருடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது,
" ஒரு அதிபராக, வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்தளித்திடும் மாபெரும் கௌரவம் எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை, இது பெரிய விஷயம். கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் விவேக் மூர்த்தி வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் இன்று இங்கு கூடியுள்ளனர். அமெரிக்காவில் சிறப்பானதொரு நிர்வாகம் நடைபெறுவதன் மூலம் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளேன் என்ற பெருமித உணர்வு என்னிடம் இப்போது உள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.