Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு - கனடா பதிலடி !

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
10:43 AM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Advertisement

மேலும், பல்வேறு நாடுகள் மீதும் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது, "சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் வரி விதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்க மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

30 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு உண்டனையாக வரி விதிக்கப்படும். இதை தொடர்ந்து இதைத் தொடர்ந்து 21 நாட்களில் C$125 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது மேலும் வரிகள் விதிக்கப்படும். அடுத்த சில வாரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு கடினமானதாக இருக்க போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
25PercentagainstAmericaCanadaPresidentTrumpUS
Advertisement
Next Article