சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் - #KamalaHarris-க்கு பெருகும் ஆதரவு!
ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே (ஏஏபிஐ) துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் இவர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே (ஏஏபிஐ) துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, ஏஏபிஐ டேட்டா மற்றும் ஏபிஐஏவோட் நடத்திய கருத்துக் கணிப்பில், "ஏஏபிஐ மக்களில் பத்தில் 6 பேர் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் இருந்தே இந்த மக்களிடையே கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.