2023-ல் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைவு - NSO கணக்கெடுப்பு!
கடந்த 2023 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.5% ஆக குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் வேலையின்மை 7.2 % ஆக இருந்த விகிதத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.5 % ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் ; “எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!
இது குறித்து NSO கணக்கெடுப்பில் தெரிவித்ததாவது;
"நகர்ப்புற குடியிருப்பாளர்களிடையே தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் ஒரு நிலையான உயர்வில் இருக்கிறது. கடந்த அக்டோபர்-டிசம்பர் 2022 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் விகிதம்22.3 சதவிதமான இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில், 25% ஆக அதிகரித்துள்ளது. மேலும், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தொழிலாளர்களின் மக்கள்தொகை விகிதம் மேல்நோக்கிய பாதையில் உள்ளது.
இதையடுத்து, மூன்று மாத காலத்திற்குள் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலையின்மை விகிதம் போன்ற குறிகாட்டிகளை மதிப்பிடுவதில் கவனம் செலுத்துகிறது" இவ்வாறு NSO கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது.