Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

09:06 PM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

1,105 காலி பணியிடங்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28-ம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12 ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் கடந்த செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வை எழுதியிருந்தனர்.  இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது.

இந்நிலையில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Civil ServicesCMSCSEIASMainsNews7Tamilnews7TamilUpdatesresultUPSC
Advertisement
Next Article