Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோத்தகிரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 'உப்பு ஹட்டுவ' பண்டிகை!

08:11 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் படுகர் இன மக்களின் 'உப்பு ஹட்டுவ' பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் 400க்கும்மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் படுகர் இன
மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உப்புஹட்டுவ பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து அவரவர் வீட்டிலிருந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு  வழங்கி வழிபட்டனர்.

பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பனியாரங்கள், கோதுமை தோசைகளை அவற்றிற்கு தீவனமாக வழங்கினர். அதன்பின்னர் மாடுகளை தங்களது கிராமத்திற்கு அருகே உள்ள மேய்ச்சல் இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவார்கள். தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு பின்பு காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டிற்கு கொண்டு சென்று அதை வீட்டின் முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர். இதன் காரணமாக தங்களுக்கு நோய், நொடிகள் வராமல் இருக்க அந்த செடிகள் உதவும் என்பது ஐதீகம். மேலும் மாடுகள் உப்பு தண்ணீர் குடிப்பதால் அது காலையிலிருந்து இரவு வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பி வரும் என நம்பிக்கை நிலவுகிறது.

மேலும் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி
மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இனமக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும்
வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி,
மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என தெரிவிக்கின்றனர்.

Tags :
BadagasCelebrationfestivalKotagiriSalt Hattuva Festival
Advertisement
Next Article