Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆர்.ஜே.பாலாஜி-யின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்! - போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

12:35 PM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

ஆர்.ஜே பாலாஜி-யின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

2010 ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக பணிப்புரிந்தவர் .  இவர் தொகுத்து வழங்கிய டேக் இட் ஈசி,  க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பெரிய ஹிட்டானது.  அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

புகழ்,  ஜில் ஜங் ஜக்,  தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.  2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார்.  இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.  சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் வெளிவந்த 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார்.  ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை திரிஷாவை வைத்து இயக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,  தற்போது ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதியப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.  இவர் நடிக்கும் அடுத்த படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.  ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரனையை தொடங்கியது சிபிசிஐடி!

அதில் பாலாஜி ஒரு கையில் கத்தியுடனும் மறு கையில் மெலுகுவர்த்தியை சிகரெட் போல் பிடித்துக் கொண்டும்,  அவர் அணிந்திருக்கும் சட்டை முழுக்க ரத்த கறைகள் படிந்தும் இருக்கிறது.  இது ஒரு திரில்லர் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திரைப்படத்தின் இயக்குநர்,  மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
cinema updatemageshrajMillion Dollar StudiosmovieRJBalajiyuvrajganesan
Advertisement
Next Article