Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#HappyBirthdaySurya | நள்ளிரவில் வெளியான சூர்யா 44 படத்தின் அப்டேட்!

07:04 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Advertisement

சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிளாப் அடித்து தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு குட்டி சுவரில் அமர்ந்திருக்கும் சூர்யா, 80களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சூர்யா 44’ முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கேங்க்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்பதை இந்த கிளிம்ப்ஸ் உறுதி செய்கிறது. எனினும் படத்தின் டைட்டிலை இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

 

 

Tags :
Love Laughter WarSuriya 44
Advertisement
Next Article