Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆல் இஸ் வெல்..." | உ.பி.யில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த அகிலேஷ் யாதவ்!

04:18 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும், போட்டி என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் இதுவரை 31 வேட்பாளர்களை ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரியங்கா காந்தி பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது..

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி என்று அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். அகிலேஷ் யாதவ் கூறியதாவது, ‘காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்ததில்லை. பாஜக செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது’ என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து  காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா கூறுகையில், " சமாஜவாதியும் காங்கிரஸும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும். இது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும்.  சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 இடங்களையும் பெற முயற்சிப்போம்”  என தெரிவித்தார்.

Tags :
Elections2024UttarPradesh | UP | | ElectionNow | LokSabhaElection2024 | ParliamentElection2024 |
Advertisement
Next Article