Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!

11:40 AM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது போன்ற பரபரப்பான சூழலுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இது மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Bishnupurformer chief ministerHomelessKukiMairembam KoirengManipurMeiteimilitantsnews7 tamilRocket Attack
Advertisement
Next Article