Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்" - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

06:55 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் முழுக்க பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வார  இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு..!

இந்நிலையில், ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோ ரயிலில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணிகள் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://x.com/cmrlofficial/status/1791751156286300649

Tags :
Chennaichennai metroCMRLMetrometrorailsummerbreakTouristsTrainTravel
Advertisement
Next Article