தனித்துவமான “கியர் ஷிஃப்டர்” | Uber ஓட்டுநரின் யோசனை இணையத்தில் வைரல்!
தோள்பட்டை வலி காரணமாகத் தனது காரில் கியர் ஷிஃப்டரை தனித்துவமாக வடிவமைத்த Uber ஓட்டுநரின் யோசனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப ஆர்வமுள்ள கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற ஊர் பெங்களூரு. அவ்வப்போது, நகரத்திலிருந்து சுவாரஸ்யமான கதைகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. இந்த முறை, Uber ஓட்டுநரின் தனித்துவமான கியர் ஷிஃப்டர் பலரைக் கவர்ந்ததால், நகரத்தின் சுவாரஸ்யமான பேச்சாக மாறியது.
பார்த் பர்மர் என்ற நபர், இந்த தனித்துவமான ஓட்டுநரின் வண்டியில் பயணித்தபோது, அவர் கியர் ஷிஃப்டரைக் கவனித்து, மைக்ரோ பிளாக்கிங் தளமான Xல் அதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
பர்மர் தனது ட்வீட்டில், "இந்த ஊபர் டிரைவர் ஒரு தனித்துவ கியர் ஷிஃப்டரை வடிவமைத்துள்ளார். ஏனெனில் அவருக்கு கியர் மாற்றும் போது தோள்பட்டை வலி ஏற்பட்டது. மொத்த விலை அவருக்கு ₹ 9,000. இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை. என அவர் அந்த் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்த இடுகை 11,000 பார்வைகளையும் ஏராளமான விருப்பங்களையும் பெற்றுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தப் பலர் கருத்துப் பகுதியில் தங்களின் வாழ்த்துகளையும், வடிவமைப்பு குறித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.