Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
08:59 AM Feb 14, 2025 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த தவெக தலைவர் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

Advertisement

இதையடுத்து தவெக தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது சர்ச்சையானதால் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
'Y'categoryleaderOrderssecurityTamilNadutvkTVKVijayUnion Home Ministryvijay
Advertisement
Next Article