Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு !

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
07:25 AM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இங்கிலாந்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் வெட் கூப்பரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், ஆள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி இருவரும் கலந்துரையாடினர்.

Advertisement

இதேபோன்று தொழில் மற்றும் வர்த்தக துறைக்கான அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் உடனும், வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமி உடனும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரையும் சந்தித்து பேசினார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை டவுனிங் தெருவில் உள்ள அவருடைய அரசு பங்களாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அப்போது. பிரதமர் மோடியின் சிறந்த வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டேன். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு, பொருளாதார ஒப்பந்தம் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னெடுத்து செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி ஸ்டார்மர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் பகிர்ந்து கொண்டார். இந்த பயணம் முடிந்ததும், நாளை அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Tags :
ENGLANDIndiaminister jaishankarprime ministerStarmer
Advertisement
Next Article