Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
01:24 PM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார்.

Advertisement

அதில், "ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உட்பட எதிர்கால விண்வெளி திட்டத்திற்காக மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுதளம் ரூ.3 ஆயிரத்து 984.86 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல், 90 மீட்டா் உயரமும் அதிகபட்சமாக 1,000 டன் எடையும் கொண்ட ராக்கெட்டுகளை ஏவும் திறனுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவடையும். தற்போது இருக்கும் ஏவுதளங்கள் 1000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால் 3வது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
approvesPlanSriharikotathird launchUnion Cabinet
Advertisement
Next Article