Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ஊழியர்கள் எதிர்பார்ப்பது என்ன?

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு, சலுகைகள் , ஓய்வூதியம் போன்றவற்றை திருத்துவதற்கான 8-வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10:07 AM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியர்களின் ஊதிய உயர்வு விகிதம் குறித்தும், சலுகைகள் குறித்தும் தீர்மானிக்கப்படுக்கிறது. அந்தவகையில் 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் ஆட்சியில் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைப்படி ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் தற்போது ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி அடிப்படை சம்பளம் ரூபாய் 7,000ல் இருந்து ரூபாய் 18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 3,500ல் இருந்து ரூபாய் 9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூபாய் 2,50,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 7வது ஊதியக் குழு அளித்த பரிதுரை காலம் இந்தாண்டோடு முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் தற்போது 8ஆவது ஊதியக் குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 8ஆவது ஊதியக் குழுவுக்கான தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாகவும் அவர்கள் வழங்கும் பரிந்துரைகள்அடுத்தாண்டு ஜனவரி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

8ஆவது ஊதியக் குழு அடுத்தாண்டு முதல் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை 186 % உயர்த்துன் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது வழங்கப்படும் அடிப்படை8th Pay Commission ஊதியமான ரூபாய் 18,000 உடன் ஒப்பிடும்போது ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

 

Tags :
8th Pay CommissionCabinet Decisioncentral govermentCentral Government JobUnion Cabinet
Advertisement
Next Article