Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பு - தமிழ்நாட்டை குறிப்பிடாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

12:20 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

வெள்ள பாதிப்புகள் குறித்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடாதது எதிர்க்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

உற்பத்தி அதிகரிப்பு, ஊரக மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட 9 குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும், பீகாரில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அசாம், இமாச்சல், உத்தராகண்ட், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ள பாதிப்புகள் குறித்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடாதது பெறும் எதிர் கட்சியினரிடையே பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Next Article