Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி பால் விநியோகம் - அமைச்சர் மனோ தங்கராஜ்!

01:51 PM Dec 06, 2023 IST | Syedibrahim
Advertisement

அனைத்து இடங்களிலும் தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக,  அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பால் விநியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றுமுதல் பால் விநியோகம் முழுவதும் சீரமைந்துள்ளது.  வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் பால் உற்பத்தியிலும்,  விநியோகத்திலும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பால் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக உள்ளது.  சென்னை மாநகரை பொறுத்த வரையில் இங்கு தேவைப்பட்டாலும் வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர்,  சோழிங்கநல்லூர்,  மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம்.  சென்னை பெருநகர பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கால்நடை இல்லாத காரணத்தினால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இந்த சூழ்நிலையில் தான் இரண்டு நாட்கள் ஆவின்,  தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது.  அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது.  அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் வினியோகத்தை சீரமைத்து இன்றைக்கு ஓரளவுக்கு பால் வினியோகிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.  பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.  பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#ministermanothangarajaavinmilk
Advertisement
Next Article