Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்”

ரஷ்யவின் அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
07:30 PM Aug 24, 2025 IST | Web Editor
ரஷ்யவின் அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
Advertisement

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக  போர் நடைப்பெற்று வருகிறது.  நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த் ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்  உள்ள ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே  போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு  நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தொடர்ந்து டிரம்ப் கடந்த  19 ஆம் தேதி உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷியாவின் குருஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷ்ய அணு மின் நிலையம் மீதான தாக்குதல் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags :
nuclearplantattackrussiaUkrainukrainrussiawarWorldNews
Advertisement
Next Article