Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#UGCNET Exam : முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தோ்வுகள் முகமை!

07:00 AM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

யுஜிசி நெட் தேர்வுகள் ஆக. 21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் முதல் மூன்று தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 1,205 மையங்களில் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 8,580 பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில், நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறதாகத் தகவல்கள் வந்தன.

அதையடுத்து, யுஜிசி நெட் தகுதித் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதற்கான மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் எனவும் என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர மொத்தமுள்ள 83 பாடங்களுக்கும் எந்தெந்த நாள்களில் தோ்வு நடத்தப்படும் என்ற விரிவான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. தேர்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : “மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் ” – #PadmaAwards பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!

முதல்கட்டமாக ஆகஸ்ட் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை  அடுத்தடுத்து வெளியிடப்படும். கூடுதல் விவரங்கள் வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AssistanProfessorexamHallTicketNETNETExamUGC
Advertisement
Next Article