Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

UGC NET தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மாட்டுப் பொங்கல் அன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
08:40 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

மாட்டுப் பொங்கல் அன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

Advertisement

தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது.

இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

அதில் ஜனவரி 15 (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த நெட் தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article