ஆக.19-ல் துணை முதலமைச்சராக பதவியேற்க போகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
02:24 PM Aug 09, 2024 IST
|
Web Editor
கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதிதான் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
“ஆக.19-ல் தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Advertisement
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என தெரிவித்தார். தொடர்ந்து 19ஆம் தேதிக்கு பின்னர் அதனைப் பார்த்துக் கொள்ளலாம் என சமாளித்தார்.
அதன்பின், ரூ.30 கோடி மதிப்பில் ராமேஸ்வரத்தில் விரைவில் பைபாஸ் சாலை அமைக்கப்படும். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். கரூர் காவிரி கூட்டு குடிநீர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மூன்று மாதங்களில் முழுமையாக நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.
Next Article