Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மெய்யழகன்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ்!

05:24 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

மெய்யழகன் திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது திரைப்பட தணிக்கை வாரியம்.

Advertisement

‘96’ பிரேம்குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும்.

படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியூரிலிருந்து வரும் அரவிந்த் சாமிக்கும், கார்த்திக்கும் இடையேயான உறவை விவரிக்கும் கதையாக மெய்யழகன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை வாரியம். சமீக காலமாக, யு சான்றிதழ் பெறும் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்த சூழலில் ஆக்சன் இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக மெய்யழகன் உருவாகியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Arvind swamiKarthiMeiyazhaganPremkumarU Certificate
Advertisement
Next Article