Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லால் சலாம் திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!

09:59 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்துள்ளது.  இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  “இந்த ஆண்டில் புதுப்பேட்டை 2 படப்பிடிப்பு தொடங்கும்?” – இயக்குநர் செல்வராகவன்…!

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.   இந்த படம் வரும் பிப். 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Aishwarya rajinikanthLal salaamLal Salaam From Feb9RajinikanthVishnu Vishal
Advertisement
Next Article