Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை... மயிலாடுதுறையில் பதற்றம்!

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10:23 AM Feb 15, 2025 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்த நிலையில், தட்டி கேட்பவர்களை அடித்தும், கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் (பிப்.13) ராஜ்குமார் ஜாமினில் வெளிவந்துள்ளார். அப்போது தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரும் கத்தியால் குத்தியுள்ளனர். சராமாரியாக கத்தியால் குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.

சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் மூவேந்தனை தேடி வருகின்றனர்.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே, கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் உறவினர்கள் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
alcoholCrimeMayiladuthuraiyouths
Advertisement
Next Article