நாட்டில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு!
இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.
இயந்திரமயமான இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுகின்றனர். வேலைப்பளு தூக்கமின்மை முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் ஆரோக்கியம் - 2024 என்ற அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டுள்ளது.