Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!

12:20 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு அருகே நேற்று ஜீப் கவிழ்ந்ததில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். 

Advertisement

காயமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள்.  கைரேனி நகராட்சியின் வார்டு எண். 12ன் தலைவர் கேதார்நாத் பான்டா கூறுகையில்,  இந்த சுற்றுலா பயணிகள் ஜங்கிள் சஃபாரிக்காக சித்வான் தேசிய பூங்காவை நோக்கி சென்றபோது கைரேனியில் உள்ள தாராய் ஏரி அருகே விபத்து ஏற்பட்டது.

அதிகாரிகளின் கூற்றுப்படி,  காத்மாண்டுவில் இருந்து தெற்கே 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிட்வான் தேசியப் பூங்கா,  ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் வங்கப்புலிக்கு பெயர் பெற்றது.  காயமடைந்தவர்கள் அனைவரும் மும்பையின் பெந்தலி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சுற்றுலா பயணிகள் ராமச்சந்திர யாதவ்,  சுதேஷ் சங்கர் காடியா,  பங்கஜ் குப்தேஷ்வர்,  வைஷாலி குப்தேஷ்வர்,  சுஷ்மிதா சுதேஷ் காதியா மற்றும் விஜயா மோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்கள் பரத்பூர் மற்றும் ரத்னாநகர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் நேபாளத்தை சேர்ந்த ஜீப் ஓட்டுநரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

Tags :
AccidentIndiainjuredjeepNepaltourist
Advertisement
Next Article