'இரு நாடுகள்' தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை - இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 3 மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இரு நாடு தீர்வை பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான பல ஆண்டுகாலப் பிரச்னையைத் தீர்க்க, இரு நாடுகளை உருவாக்கும் முடிவினை எதிர்க்கும் இஸ்ரேல் அதிகாரிகளின் வரிசையில் ஐசக் ஹெர்சார்க் இணைந்துள்ளார்.
இது குறித்து ஐசக் ஹெர்சார்க் கூறியதாவது; "இஸ்ரேல் இன்னும் அக்டோபர் 7 தாக்குதலில் இருந்தே மீழவில்லை. மக்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கென தனி நாடு உருவாக்கித் தருவது தொடர்பாக பேச முடியாது.
இதையும் படியுங்கள் : தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!… – வானிலை ஆய்வு மையம்
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பிற்கு முன் இதைத் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோர்க் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சி இரு நாடுகளை உருவாக்கும் தீர்வை ஆதரித்து வருகிறது.