Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பானில் இரு விமானங்கள் மோதி தீ விபத்து - 379 பயணிகள் பத்திரமாக மீட்பு!

06:45 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது, 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் 379 பயணிகளுடன் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.  இந்த விமானம் டோக்கியோவில்  தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்!

உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.  ஜப்பான் கடற்படையின் எம்ஏ-722 என்ற சிறிய ரக விமானம் மோதியிருக்கக்கூடும் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும், கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

Tags :
Fire accidentflightFlight AccidentJapannews7 tamilNews7 Tamil Updatestokyo
Advertisement
Next Article