Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
07:34 AM Aug 20, 2025 IST | Web Editor
இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை 4.39மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 32.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags :
#ScaredEarthquakeshimachal pradeshPeopleTwo earthquakes
Advertisement
Next Article