#Isreal தாக்குதலில் இரட்டைக் குழந்தைகள் , மனைவி உயிரிழப்பு - பிறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!
பிறந்த நான்கு நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்த தந்தை பிறப்புச் சான்றிதழோடு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் பலர் தங்களது குடும்பத்தில் ஒருவரையாவது இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் பார்த்து பலர் கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் போன்று ஒரு நிகழ்வுதான் தற்போது பாலஸ்தீனத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆனால் வீடு திரும்பி பார்த்தபோது இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே செய்தியே அவருக்கு மிஞ்சியது. மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் அபு அல் கும்சானின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல் மற்றும் அசைர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு கதறி அழும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.