Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVKFlagAnthem-ல் அண்ணா...எம்ஜிஆர்... என்ன சொல்ல வருகிறார் Vijay?

03:02 PM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

தவெக கட்சியின் கொடிப் பாடலில் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் படம் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது' எனும் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த பாடலில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. திராவிட இயக்கத்தின் முன்னோடியான பேரறிஞர் அண்ணா மற்றும் இரட்டை இலையை குறிக்கும் விதமாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது. இருபெரும் அரசியல் தலைவர்களுக்கு நடுவே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் குறித்து அவர் இதைத் தான் சொல்ல வருகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் அவர்களது பாணியில் திராவிட இயக்க சிந்தாந்தத்திலேயே தவெக கட்சியும் செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :
Flag Anthemtvk flagTVK Flag AnthemTVK Vijaytvk vijay hq
Advertisement
Next Article