#TVK மாநாடு | விஜய் என்ன பேசப்போகிறார்? கசிந்த தகவல்!
தவெக மாநாட்டில் நிறைவேற்றப்போகும் தீர்மானங்கள் என்னென்ன? விஜய் பேசப்போவது என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை நடைபெறவிருக்கிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழ்நாடு மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டிற்காக நேற்று இரவு முதலே தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், பல மாநிலங்களிலிருந்தும் அவரது ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர். குறிப்பாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முதல் 6 கிலோமீட்டருக்கு வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. மாநாட்டு அரங்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணமிருக்கிறது. மாநாட்டு அரங்கு கூடுதலாக விரிவாக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் ஏரியாவும் 12 ஏக்கர்கள்வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் செய்கிறார்” - முதலமைச்சர் #MKStalin பேச்சு!
இந்நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை விட தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதே அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கல்விக் கொள்கை, போதை பொருள் பற்றி தவெக தலைவர் விஜய் பேசுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்போகும் தீர்மானங்கள் மற்றும் மேடைப்பேச்சு பாஜக, திமுகவிற்கு எதிராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டு கொள்கைகளையும் கொண்டதாக விஜயின் மேடை பேச்சு அமையும் என கூறப்படுகிறது.