Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து வழிபட்டு இஃப்தார் நோன்பு திறந்தார் !

தவெக சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்துள்ளார்.
06:39 PM Mar 07, 2025 IST | Web Editor
தவெக சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்துள்ளார்.
Advertisement

ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இஸ்லாமியர்களோடு மத நல்லிணக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வருகை தந்து அங்கு கூடியிருக்கும் இஸ்லாமியர்களுடன் இணைந்து வழிபட்டார்.

இதற்கிடையில் தவெக தலைவர் விஜய்யை காண வந்த அக்கட்சித்தொண்டர்கள் அதிகளவில் நோன்பு திறக்கும் அரங்கில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அங்குள்ள கண்ணாடிகள் உடைபட்டது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் 2,500க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்களோடு சமமாக அமர்ந்து  இஃப்தார் நோன்பு திறந்தார். பின்பு மக்ஃரிப் பாங்கு சரியாக 6:28 மணி அளவில் நடைபெற உள்ளது. மக்ஃரிப் தொழுகை 6.35 மணிக்கும், இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்ட உள்ளது.  மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவை விருந்தாக பேக்கிங் செய்யப்பட்டு கொடுக்கப்பட உள்ளது.

Tags :
Ifthar PartyRamadanMubarakRamadhanRoyapettahTVK Vijay
Advertisement
Next Article