புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விக்க முயற்சி! விமான பயணம் ஏற்பாடு செய்த நடிகர் கோபி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்விக்க நடிகர் கோபி ஏற்பாடு செய்த நிலையில், அக் குழந்தைகளை நடிகர் சசிகுமார் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற நடிகர்
கோபி அதில் கிடைத்த பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடுவேன் என அப்பொழுது கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தேன்மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் வான் உலா என பெயரிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதல்முறையாக விமானத்தில் பெங்களூர் அழைத்துச் அழைத்துச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கோபியுடன் இணைந்து வான் உலா என்ற தலைப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை விமான நிலையத்திலிருந்து விமான மூலம் பெங்களூர் அழைத்து செல்கிறோம் அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் இவர்களை தங்கவைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக இதை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகள் அனைவரும் பத்திலிருந்து பதினைந்து வயதிற்கு உட்பட்டவர்கள்.
இவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் இவர்களை மனதளவில் உற்சாகப்படுத்துவதற்காக இந்த பயணம்
மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இவர்களை நடிகர் சசிகுமார் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட், அம்மு அபிராமி, பார்த்திபன் டைரக்டர் மோனிஷா சென்னை விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைத்தனர்.