Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

' #Trump - பை கொலை செய்பவருக்கு ரூ.1.25 கோடி தருகிறேன்' குற்றவாளியின் கடிதத்தால் பரபரப்பு!

06:46 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.  ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 12ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த டிரம்ப் மீது கடந்த செப்டம்பர் 15ம் தேதி புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கொலை முயற்சி நடந்தது. டிரம்ப் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாகக் குறிபார்த்துக்கொண்டு இருந்தார். இதை கண்ட டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

இதையும் படியுங்கள் : #MirchiSiva நடித்த ‘சுமோ’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீதான விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ரயானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த கையால் எழுதிட அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பையும் எழுதி வைத்துள்ளார் ரயான். "Dear World" என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்த பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும், இருப்பு பைப் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த குறிப்பில், டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி இது. ஆனால் நான் தோற்றுவிட்டேன். என்னால் முடித்தவரை எனது முழு சக்தியைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க நான் முயற்சி செய்தேன். இப்போது இந்த வேலையே செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்து முடிபவருக்கு நான் 150,000 டாலர்கள் ( இந்திய மதிப்பின்படி சுமார்1.25 கோடி ருபாய்) தருகிறேன் என்று ரயான் எழுதி வைத்துள்ளார். இந்த பெட்டி இருந்த வீட்டில் வசித்து வந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags :
CrimeguninvestigationLetternews7TamilUpdatesopen contractTrump
Advertisement
Next Article