Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

த்ரிஷாவின் ‘பிருந்தா’ வெப் தொடர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

09:49 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

த்ரிஷா நடித்துள்ள 'பிருந்தா' வெப் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து சாமி, கில்லி, ஆறு, குருவி, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  தொடர்ந்து த்ரிஷா 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தக் லைஃப்,  விடா முயற்சி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.  இந்த நிலையில் இவர் சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கிய வெப் தொடரில் நடித்துள்ளார்.  இந்த தொடருக்கு 'பிருந்தா' என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் த்ரிஷா போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், மணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மவுலி உட்பட பலர் நடித்துள்ளனர். ஆஷிஷ் தயாரித்த இந்தத் தொடருக்கு, சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார்.  இந்த தொடரின் டீசர் நேற்று வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில், இந்தத் தொடர் இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags :
பிருந்தாBrindaOTT Release DateTeaserthrillerTrishaTrisha KrishnanWeb Series
Advertisement
Next Article