Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WestBengal இடைத்தேர்தல் | "அரசு இயந்திரங்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்" - அமித்ஷா மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார்!

08:28 AM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

அரசு இயந்திரங்களை கட்சியின் பிராச்சாரத்திற்காக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

Advertisement

மேற்கு வங்கத்தில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வடக்கு 24 பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட ஹரோவா மற்றும் நைஹாதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பர்கானா மாவட்டத்தில் பெட்ராபோல் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமித்ஷா அரசியல் சாயம் பூசியுள்ளார். அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் தேர்தல் பணிகளுக்கும் இடையே வேறுபாட்டை கடைபிடிக்கிறேன் எனக்கூறும் மத்திய உள்துறை அமைச்சரின் நோக்கங்கள் மீது கடுமையான சந்தேகங்கள் எழுகிறது. மேலும், அரசு இயந்திரங்களை தங்கள் கட்சியின் தனிப்பட்ட பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்"

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
amit shahElection commissionIndiaNews7Tamilnews7TamilUpdatesTrinamoolCongress
Advertisement
Next Article